முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்நிலையில் எரிகின்றன வீட்டில் கூரையை பிடுங்குவது போல் கந்துவட்டி மற்றும் நுண்கடன் அந்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கந்து வட்டியின் பின்னால் இருப்பவர்களில் ஒருவர் தான் முன்னாள் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனின் பணத்தின் பினாமியாகவும் அடியாளாகவும் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்மடு வட்டாரத்தை சேர்ந்த கரைச்சிப் பிரதே சபை உறுப்பினருமான கந்துவட்டி ஜீவன் ஆவார்.
இவர் முள்ளிவாய்காலில் யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகளின் பழைய இரும்புகளை தென்னிலங்கைக்கு களவாக விற்பனை செய்துவந்ததோடு தன்னுடைய கடத்தலுக்கு உதவியவருக்கு 3பவுணில் தங்க மோதிரத்தையும் பரிசாக அளித்துள்ளார்.
மேலும் இவரிடம் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற விசுவமடுவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் (வேணி-நகைமாடம்) அவர்கள் இவரின் மீற்றர் வட்டியினை கட்டமுடியாது இவரது அச்சுறுத்தலாலும் பல தொல்லைகளாலும் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. இதனை தனது பண பலம் மற்றும் அரசியலில் உள்ள செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி மறைத்து விட்டார் இந்த கந்துவட்டி ஜீவன்.
மேலும் இவர் வட்டிக்கு கொடுத்தவர்களின் வீடுகளுக்கு சென்று வீடுகளில் உள்ள பெண்களுடன் தவறான வார்த்தை பிரயோகம் செய்து வருபவர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி திருநகர் சுடலையடியில் இவரை கட்டிவைத்து நையப்புடைத்தமை குறிப்பிடதக்கது.
இவ்வறானவர்களை தங்கள் சுயலாப கட்சி அரசியலுக்கு சிறிதரன் பயன்படுத்தி வருவதோடு தமிழர்களின் போராட்டத்தை தவறு என பொது வெளியில் கூறிவரும் சுமந்திரனை ஆதரிப்பதோடு சுமந்திரன் விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்திற்கு நிகரானவர் எனப் பிரச்சாரமும் செய்து வருவதால் இம்முறை தேர்தலில் சிறிதரனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.