குருநாகல், கலேவெல அலுத்வெவ பிரதேசத்தில் செல்லப்பிரணிகளாக வளர்க்கப்பட்ட 12 நாய்களை விவசாயி ஒருவர் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு இவ்வாறு கோழி, நாய் போன்ற விலங்குகளும் குறித்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், விஷம் வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.