களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.