• தொடர்புகொள்ள
Wednesday, January 27, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண திருவிழா லண்டனில் ஆரம்பம்

கயல்விழி by கயல்விழி
May 30, 2019
in செய்திகள், விளையாட்டு
0
2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண திருவிழா லண்டனில் ஆரம்பம்
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று  (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன.  மேலும், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் – டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கிண்ண முதல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எதிர்ப்புகளுக்கு மத்தியில் வவுனியாவில் மேலும் 80 அகதிகள் தஞ்சம்?

Next Post

களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டது

Next Post
களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டது

களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்