தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், இதுகுறித்து ஆராய மத்திய அரசு தீர்ப்பாயமொன்றை அமைத்துள்ளது.
இதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில், சட்டவிரோத தடுப்பு ஆணையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணையம், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது பற்றி ஆராயவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.