
ஐ.பி.எல். 12 தொடரின் 30 ஆவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திலிருக்கும் டில்லி அணி 6 ஆவது இடத்திலிருக்கும் ஐதராபாத் அணியை எதிர்கொள்கின்றது.
இப்போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு ரஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புவனேஸ்குமார் தலைமை தாங்குகின்றார். டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை தாங்குகின்றார்.
இதுவரை இரு அணிகளும் 13 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. ஐதராபாத் அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 4 போட்டிகளில் டில்லி அணி வெற்றிபெற்றுள்ளது.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 3 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.