ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பீஜிங்கில் நடைபெறவுள்ள ஆசிய நாகரிகங்கள் குறித்த மாநாடொன்றில் கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி இவ்விஜயம் அமைந்துள்ளது.
குறித்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீனா இன்று (திங்கட்கிழமை) காலை சீனாவிற்கு புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியுடன் 27 பேரடங்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.
ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர கற்றல் செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளின் கீழ் சீனாவில் இம்மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.