சசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவி காத்திருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டகம் சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். சசிகலாவிடம் ஆலோசனை செய்துதான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
சசிகலாவின் வரவுக்காக அ.ம.மு.க. தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படுவார்கள். அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்ரல் 22இல் மனு அளிக்கவுள்ளோம்” என்று கூறினார்.