• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

தமிழ் வேந்தன் இராவணன் புகழ்கூறும் செய்மதி விண்ணில்லத்தை சென்றடைந்தது

கயல்விழி by கயல்விழி
April 19, 2019
in அறிவியல், செய்திகள், தாயகம்
0
தமிழ் வேந்தன் இராவணன் புகழ்கூறும் செய்மதி விண்ணில்லத்தை சென்றடைந்தது
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

நேற்று அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட குறித்த செய்மதி இன்று விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

இந்தச் செய்மதியானது, எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியூ பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.

ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இந்த செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும் அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தரம் 5 புலமை. பரீட்சை; 2019க்கு விண்ணப்பித்தவர்கள் விரும்பினால் தோற்றலாம்

Next Post

இளம்பெண் கொடூரக் கொலை – பங்களாதேஷில் போராட்டம் வெடித்தது!

Next Post
இளம்பெண் கொடூரக் கொலை – பங்களாதேஷில் போராட்டம் வெடித்தது!

இளம்பெண் கொடூரக் கொலை – பங்களாதேஷில் போராட்டம் வெடித்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்