நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் துணை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு வாக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு ஆரம்பமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் துணை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு வாக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. எனினும் அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்திக்கு வாக்குள்ளது.
அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு வாக்கு இல்லை. எனவே அவர் வாக்களிக்க செல்லவில்லை.
இதேபோல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் வாக்களிப்பதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் இன்று காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார்.
எனினும், அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவராலும் வாக்களிக்க முடியவில்லை.