ஐ.பி.எல். ரி-20 தொடரின் 30ஆவது லீக் போட்டியாக நடைபெற்ற போட்டியொன்றில், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
தைராபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 45 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் காலீல் அஹமட் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், 18.5 ஓவர்கள் நிறைவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 39 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
மறுபுறம் இந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிடல்ஸ் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 51 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டோவ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக கார்கிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோறிஸ் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணியின் பந்து வீச்சில் அசத்திய கீமே போல் தெரிவுசெய்யப்பட்டார்.